பாலியல் ஓர் அறிமுகம்


அன்பானவர்களேஇந்த உலகில் கடவுள் மனிதனுக்கு கொடுத்த முக்கியமான உணர்ச்சிகளுள் பாலியல் மிக முக்கியமானதாகவும், அதிக சக்தி வாய்ததாகவும், இருக்கிறது. பாலியல் உணர்வு கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தமான உணர்வாகும், இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இந்த உணர்ச்சிக்குறிய வேட்கை இரு பாலரிடமும் பொதுவானதாகக் காணப்படுகிறது.

இது மனித உணர்ச்சிகளில் மிக முக்கியமானது என்று சொல்லக் காரணம்; சில சமயம் மனித வாழ்க்கையை மாற்றிவிடக்கூடியதாக இருப்பதால் தான், மேலும் இந்த உணர்ச்சி மிகவும் ஆபத்தானதும் கூட ஏனென்றால் மனிதனை வீழ்த்த பிசாசு இந்த உணர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு, அவன் வாழ்க்கையையே வீழ்த்தி விடுகிறான்,

இந்த உணர்ச்சி எதற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது? எனபதை ஆதியாகமம் முதல் சில அதிகாரங்களிலேயே நமக்கு சொல்லப்பட்டு விட்டது (பலுகிப்பெருகுங்கள் ஆதி;1.28),

மனிதன் முதன் முதலாகப் பாவத்தில் விழுந்த போது முதன் முதலாக பாதிக்கப்பட்டதும் பாலுணர்ச்சியாகும், ஆம் அதுவரை அவர்கள் நிர்வாணிகள் என அறியாமல் இருந்தனர். இத்தகைய பாலுணர்ச்சியை பிசாசு மனிதனின் வாழ்வை நாசமாக்குவதற்காக முற்றிலும் பழைய தந்திரங்களையே பயன்படுத்துகிறான், பாலுண‌ர்ச்சியை எப்படி பாவத்திற்கேதுவாக திருப்புகிறான் எனபதை நாம் அடுத்த கட்டுரையில் வேத அடிப்படையில் தெளிவாகக்காண்போம்.......