நித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது?அன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்

மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).

ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.

இங்கு சாத்தானின் குணநலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதனை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.

அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறது, இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் அது என்னவெனில் ஆதியாகமம், 2;19 மற்றும் நீதிமொழிகள் 5;18-ன் படி, துணை என்பது ஒருமையே தவிர பன்மை கிடையாது, ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளும் சாத்தானின் திட்டமே ஆகும்,

அப்படியானால் துனையை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் வேதம் மிகத்தெளிவாக நமக்கு பதில் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7; 36 மற்றும் 7;39 ஆகிய வசனங்களின் படி துணையை இழந்தவர்கள் அதாவது துணை மரித்துப் போனவர்கள், தங்கள் பாலுணர்வின் நிமித்தம் தங்களைப் பரிசுத்தக் குறைவு அடையாமல் பாதுகாத்துக்கொள்ள விதவை மறுமணத்தை ஆதரிக்கிறது, மேலும் முக்கியமான ஒரு செய்தி என்னவெனில் துணை உயிரோடு இருக்கும் போது அவர்களை விட்டுவிடுதல் விபச்சாரக்குற்றம் (மத்தேயு 5;32) (ரோமர் 7.3), என்று பைபிள் சொல்லுகிறது.

கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா?
இப்போது உங்களுக்கு ஒரு தெளிவான ஒரு கேள்வி வந்திருக்கும் அதாவது கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா? என்று, இதற்கு பதில் மேலேயே சொல்லப்பட்டு விட்டது மேலும் இது பற்றி பைபிள் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது 1தீமோதேயு 4;2-ன் படி கடைசி காலங்களில் இயற்கைக்கு மாறாக சந்நியாசம் ஆதரிக்கப்படும், ஆகவே அதை யாரும் செய்யவேண்டாம் என்று, இன்னும் கூட கிறிஸ்தவத்திலும் இது போன்ற சந்நியாசங்கள் உண்டு. இதற்கும் மேற்சொன்ன வசனமே சாட்சி இது குறித்து பைபிள் சொல்லும்போது மீண்டும் நமக்கு ஒரு சாத்தானின் குண நலன் நமக்கு தெரியவருகிறது அது என்னவெனில் 2 கொரிந்தியர் 11;14- நமக்கு சொல்லப்பட்ட படி சாத்தான் நம்மை வஞ்சிக்க கடவுளின் தூதன் வேடத்தைக் கூட தரித்துக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றிவிடுவான் என்று ஆகவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது

எனக்கன்பான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒருவேளை சந்நியாசம் போன்ற போதனையில் சிக்குண்டு இருக்கலாம், கடவுள் கொடுத்த பரிசுத்தமான பாலுணர்வை உன் வாழ்க்கைத் துணையிடத்தில் கூட வெளிப்படுத்தாமல் இருந்தால் கடவுள் மிகவும் மகிழ்வார் என்று உனக்குச் சொல்லப் படலாம், அதேபோல துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய பாலுணர்வை மற்ற மனிதர்களோடும் பகிர்ந்து கொள்ளவும் நீ போதிக்கப் பட்டிருக்கலாம் இவைகள் இரண்டுமே இயற்கைக்கு விரோதமானது தான். இவைகள் இரண்டுமே சாத்தானால் கொண்டுவரப்பட்டிருக்கும் தந்திரங்கள் தான். ஆகவே இவைகளை விட்டு விலகு. கடவுள் உன்னை மேன்மைப் படுத்துவார். ஆமென்.

பின்குறிப்பு (நன்றி சகோதரி எலிசபெத்)
எனக்கன்பானவர்களே இந்த கட்டுரையில் ஒரு காரியம் விடுபட்டுள்ளது, என்னவெனில் வேதம் தெளிவாக மற்றொரு காரியத்தையும் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7;32-40 வரையுள்ள வசனங்களில் ஒருவேளை நீங்கள் திருமணமில்லாமல் பரிசுத்தமாய் வாழமுடியும் என்று எண்ணுவீர்களானால், அல்லது திருமணமில்லாமல் வாழ அழைக்கப்பட்டிருப்பீர்களானால், தேவனுடைய பார்வையில் பரிசுத்தமாய் வாழுங்கள். ஒரு வேளை பரிசுத்த வாழ்விலிருந்து விலகி பாவத்தில் வாழ்ந்து விடுவோம் என்று நீங்கள் அஞ்சினால் பாவம் செய்யாமலிருக்க திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பதே அந்த் விடுபட்ட கருத்து ஆகும்.